பெண்ணை மிரட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்து மேட்டு தெருவில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சுப்புலட்சுமி என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்தார். இந்நிலையில் சுப்புலட்சுமியிடம் 46 ஆயிரம் ரூபாய் பணத்தை முருகன் கடனாக வாங்கியுள்ளார். அதில் 17 ஆயிரம் ரூபாயை மட்டுமே திருப்பி கொடுத்தார். இதனால் மீதி பணத்தை தருமாறு முருகன் வீட்டில் இல்லாத போது அவரது மகளிடம் சுப்புலட்சுமி கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த முருகன் எனது மகளிடம் எப்படி பணம் கேட்கலாம்? என கேட்டு சுப்புலட்சுமி தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் வைத்துள்ளார். இதுகுறித்து சுப்புலட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் முருகனை கைது செய்தனர்.