மாமியாரே மருமகனை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டி கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் வெண்ணந்தூர் பகுதியில் மாதவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருள்மணி என்ற மகன் இருந்தார். இதனையடுத்து அருள்மணிக்கு திருமணம் ஆகி ஜோதிலட்சுமி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். ஆட்டோ டிரைவர்ரான அருள்மணிக்கு அடிக்கடி மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்த பழக்கத்தினால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனை காரணமாக வைத்துக்கொண்டு ஜோதிலட்சுமி அடிக்கடி கணவனிடம் சண்டை போட்டுவிட்டு தனது தாய் ஜானகியின் வீட்டிற்கு சென்று விடுவார். இவ்வாறு ஜோதிலட்சுமி அடிக்கடி தனது தாய் வீட்டிற்கு சென்றபோது அதே பகுதியில் குடியிருந்து வரும் ஆட்டோ டிரைவரான மணிகண்டன் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அறிந்த அருள்மணி தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் மறுபடியும் ஜோதிலட்சுமி அவருடைய தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் தனது மகளுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்ட வந்த மருமகனான அருள் மணியின் மேல் ஜானகிக்கு கடும் கோபம் இருந்துள்ளது. இதனால் மாமியார் ஜானகி அருள்மணியை கொலை செய்ய வேண்டும் எனவும் முடிவு செய்துள்ளார். இதற்காக மகளின் கள்ளக்காதலனான மணிகண்டனிடம் உதவி நாடியுள்ளார். இதனை அடுத்து இருவரும் சேர்ந்து கொலைக்கான திட்டத்தை தீட்டியுள்ளனர். அதன்படி மணிகண்டன் மற்றும் அவருடைய நண்பர் லோகேஸ்வரன் ஆகியோர் இணைந்து அருள்மணியை மது அருந்த அங்குள்ள ஏரிக்கரைக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
அதன் பேரில் அருள்மணியும் அங்கு வந்துள்ளார். பின்னர் மூன்று பேரும் அங்கேயே அமர்ந்து மது குடித்துள்ளனர் அப்போது மணிகண்டனும் லோகேஸ்வரனும் சேர்ந்து போதையில் இருந்து அருள்மணியை கற்கள் மற்றும் மது பாட்டிலை பயன்படுத்தி தலையில் சரமாரியாக அடித்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் வெண்ணந்தூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அருள்மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதற்கிடையில் காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் மணிகண்டன் மற்றும் லோகேஸ்வரன் ஆகிய இருவரும் அருண்மணியை அடித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. மேலும் இதற்கு உடந்தை ஜானகி என்பதையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து போலீசார் காவல்துறையினர் மணிகண்டன், லோகேஸ்வரன் மற்றும் ஜானகி ஆகிய மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.