Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மகளின் கழுத்தை இறுக்கி கொன்று “தாய்” தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசினம்பட்டி கிராமத்தில் கொத்தனாரான ஜெயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 வயதுடைய பிரகன்யா என்ற மகள் இருந்துள்ளார். பிறந்ததிலிருந்து உடலுக்கு குறைவால் அவதிப்பட்ட தனது மகளை சங்கீதா அடிக்கடி மருத்துவமனைக்கு அழைத்து சென்று வந்துள்ளார். இது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. கடந்த 20-ஆம் தேதி வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய ஜெயராஜ் துண்டால் கழுத்து இறுக்கப்பட்டு பிரகன்யாவும், தூக்கில் தொங்கிய நிலையில் சங்கீதாவும் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து அலறினார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சங்கீதா தனது மகளின் கழுத்தை இறுக்கி கொன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

Categories

Tech |