Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“மகளின் காதல் திருமணத்தில் கலந்து கொள்ளாத தாய்”… கணவரின் கொடூர செயல்… தீவிர விசாரணையில் போலீஸ் ..!!!!!!

மனைவியை கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஐம்போடை கிராமத்தில் விவசாயியான பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராணி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு ராஜபாண்டி, சிவா என்ற 2  மகன்களும், பரணி என்ற ஒரு  மகளும் உள்ளனர். இந்நிலையில்  ராணி வெளிநாட்டில் வீட்டு வேலை செய்து பணம் சம்பாதித்து வந்தார். கடந்த 2  மாதங்களுக்கு முன்பு தனது தாய் இறந்ததற்காக சொந்த ஊருக்கு வந்த ராணி பின்பு வெளிநாட்டிற்கு செல்லாமல் சொந்த ஊரிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் ராணியின் மகள் பரணி அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார்.

இதனையடுத்து  நேற்று முன்தினம் அதே பகுதியில் வைத்து தனது கணவர் மற்றும் உறவினர்கள் சம்மதத்துடன் மகளின் திருமணம் நடைபெற்றது. ஆனால் இந்த  திருமணம் ராணிக்கு பிடிக்காததால் அவர் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மேலும்  ராணி தர்மபுரி மாவட்டதில் அமைந்துள்ள தனது அக்கா வீட்டிற்கு கிளம்பியுள்ளார். இதனை பார்த்த பழனி மகள் திருமணத்தில் கலந்து கொள்ளாமல் சகோதரி வீட்டிற்கு செல்கிறாயா என ராணியை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் ஆத்திரமடைந்த பழனி வீட்டில் இருந்த கத்தியை கொண்டு ராணியின் கழுத்தை  சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த ராணி  சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராணியின் மகன் சிவா உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த  தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ராணியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த பழனியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |