Categories
தேசிய செய்திகள்

மகளின் காதல் திருமணம்…. உதவி செய்த உறவினர்…. பெற்றோர்கள் செய்த கொடூர செயல்….!!!!

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகிலுள்ள பாலரோமூட்டில் அனிருதன்(63) என்பவர் வசித்துவருகிறார். இவரது மனைவி அஜிதா. இவர்களின் மகள் ஜெனட். இவர் பரியாரம் மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார். ஜெனட் அவரது நெருங்கிய உறவினரான ஸ்வரூப் என்பவரை காதலித்து வருகிறார். இதற்கு ஜெனடின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து காதலை கைவிட வேண்டும் என்று எச்சரித்து உள்ளனர். ஆனால் ஜெனட் அதைக் கேட்கவில்லை என்பதால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் அவரை பல்வேறு வகையில் மிரட்டியுள்ளனர். இந்நிலையில் ஜெனட் காதலனுடன் பெற்றோருக்கு தெரியாமல் பதிவு திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றுள்ளார். அவரது கணவர் வேலைக்காக சிங்கப்பூருக்குச் சென்று விட்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன் ஜெனடின் பெற்றோருக்கு அவர் பதிவு திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து மகளுக்கு பதிவு திருமணம் செய்து வைத்தது யார்? என்பதை அவர்கள் விசாரித்தனர். அப்போது உறவினர் ரினீஸ் என்பவர் மகளுக்கும் அவரது காதலனுக்கும்  திருமணம் செய்து வைத்துள்ளனர் என்று தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் ரினீஸை கொலை செய்ய திட்டமிட்டு கூலிப்படையை சேர்ந்த கும்பலுக்கு ரூ.2.5 லட்சம் முன்பணமாக கொடுத்துள்ளனர். இதையடுத்து கடந்த 11 ஆம் தேதியன்று வீட்டிலிருந்த ரீனிஸை கூலிப்படையினர் கொடூரமாக தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து கோழிக்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் பெண்ணின் பெற்றோர் மற்றும் கூலிப்படை கும்பல் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பெண்ணின் பெற்றோர்களே போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நேற்று செம்பன்சேரி பகுதியில் பதுங்கியுள்ள கூலிப்படை கும்பலை சேர்ந்த சுபாஷ் பென்னி(38), அருண்(27), அஸ்வந்த்(22), அவினாஷ்(21), பாலு பிரணாப்(28) ஆகியோர்களை போலிசார் கைது செய்தனர்.

Categories

Tech |