நெல்லையில் கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் கூலித் தொழிலாளியான ரவி என்பவர் வசித்து வந்தார். இவருக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் இவருடைய மூத்த மகள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்துள்ளார். இதனால் ரவிக்கும், அவரது மனைவிக்குமிடையே தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.
இதில் மனமுடைந்து மன அழுத்தத்திற்கு சென்ற ரவி இரவு நேரத்தில் வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை செய்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் ரவியின் பிரேதத்தை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.