Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த ரூ. 15 லட்சம்…. தோழியை நம்பி ஏமாந்த பெண்…. போலீஸ் விசாரணை….!!!

பெண்ணிடம் பண மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியநாயக்கன்பாளையத்தில் ராணி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய பக்கத்து வீட்டில் வசித்து வரும் பாக்கியலட்சுமியும், ராணியும் தோழிகளாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில் ராணி தன்னுடைய வீட்டில் ரூபாய் 15 லட்சம் பணத்தை வைத்துள்ளார். இதை தெரிந்து கொண்ட பாக்கியலட்சுமி வீட்டில் எதற்காக இவ்வளவு பணத்தை வைத்துள்ளீர்கள் என ராணியிடம் கேட்டுள்ளார். அதற்கு ராணி என்னுடைய மருத்துவ செலவு மற்றும் மகளின் திருமணத்திற்காக வைத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து பாக்கியலட்சுமி என்னுடைய மகன் வேலை பார்க்கும் வங்கியில் பணத்தை டெபாசிட் செய்தால் உங்கள் மகளின் திருமணத்திற்குள் அதிக வட்டி கிடைக்கும் என கூறியுள்ளார். இதை நம்பிய ராணியும் பாக்கியலட்சுமியிடம் ரூ.15 லட்சத்தை கொடுத்துள்ளார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் பணத்தை பாக்கியலட்சுமி திருப்பி கொடுக்காததால், ராணி தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாக்கியலட்சுமியின் மகன் சதுரகிரி தேவகிரி நாதனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |