Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மகளின் திருமணத்திற்கு ரூ.33 லட்சம் கடன்….. நிலத்தை மோசடி செய்த 3 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள செல்லிபாளையம் பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எல்.ஐ.சி வளர்ச்சி அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் குணசேகரன் குடும்ப செலவுக்காகவும், தனது மகளின் திருமணத்திற்காகவும் சசிகுமார் என்பவரிடம் 33 லட்சம் ரூபாயை கடனாக வாங்கியுள்ளார். மேலும் குணசேகரன் தனது நிலத்தை சசிகுமாருக்கு முன்பதிவு செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த நிலத்திற்கு சசிகுமார் போலி ஆவணங்களை தயாரித்து பெரியசாமி என்பவருக்கு விற்பனை செய்துவிட்டார்.

இதனையடுத்து பெரியசாமி அந்த நிலத்தை பாலமுருகன் என்பவருக்கு விற்றுவிட்டார். இதனை அறிந்த குணசேகரன் கரூர் பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் சசிகுமார், பெரியசாமி, பாலமுருகன் ஆகிய மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |