Categories
தேசிய செய்திகள்

மகளின் திருமணத்திற்கு வைத்திருந்த பணம்… ஆக்சிஜன் சிலிண்டர் வாங்க நன்கொடை அளித்த விவசாயி… பாராட்டிய மாவட்ட ஆட்சியர்…!!

மத்திய பிரதேசத்தில் விவசாயி ஒருவர் தனது மகளின் திருமணத்திற்கு வைத்திருந்த 2 லட்சம் ரூபாயை மருத்துவமனைக்கு ஆக்சிஜன் வாங்குவதற்கு நன்கொடை அளித்ததை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

மத்திய பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தில் உள்ள குவால் தேவியன் கிராமத்தில்  சம்பலால் குர்ஜார் என்பவர் தனது குடும்பத்துடன் விவசாயம் செய்து வருகிறார். இவர் தனது மகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக 2 லட்சம் ரூபாயை சேமித்து வைத்திருந்தார். இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை பார்த்து சம்பலால் குர்ஜார் மிகவும் வருத்தமடைந்துள்ளார்.

இதனையடுத்து  சம்பலால் குர்ஜார் தனது மகளின் திருமணத்தை கடந்த ஞாயிறு கிழமை எளிமையாக நடத்திவிட்டு திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த 2 லட்சம் ரூபாயை ஆக்சிஜன் வாங்குவதற்கு நன்கொடையாக நீமுச் மாவட்ட ஆட்சியரிடம் காசோலையாக கொடுத்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் கொரோனா தொற்றால் மக்கள் அவதிப்படுவது என் மனதிற்கு மிகுந்த வருத்தம் அளித்தது என்றும், இந்த 2 லட்சத்தை வைத்து என் மகளின் திருமணத்தை விமர்சையாக கொண்டாடுவதை விட ஆக்சிஜன் சிலிண்டர் வாங்க நன்கொடையாக அளித்தது மன நிறைவை ஏற்படுத்துகிறது என தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து இந்த விவசாயியின் செயலை மாவட்ட ஆட்சியர் உட்பட பலரும் பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |