Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மகளின் படிப்பு செலவிற்காக வாங்கிய பணம்…. கந்து வட்டி கேட்டு மிரட்டிய பெண்…. போலீஸ் விசாரணை…!!

கந்து வட்டி கேட்டு மிரட்டல் விடுத்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள அரவேனு கீழ்கேரி கிராமத்தில் சந்தானம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சர்மிளா என்ற மனைவி உள்ளார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சர்மிளா தனது மகளின் படிப்பு செலவிற்காக கோர்ஹவுஸ் பகுதியில் வசிக்கும் பூங்கொடி என்பவரிடம் 40 ஆயிரம் ரூபாய் கடனாக கேட்டுள்ளார். அதற்கு பூர்த்தி செய்யப்படாத இரண்டு காசோலைகள், ப்ரோ நோட் ஆகியவற்றில் கையெழுத்து பெற்றுக் கொண்டு பூங்கொடி அந்த பணத்தை கொடுத்துள்ளார்.

அதிலிருந்து உரிய வட்டியாக 4 ஆயிரம் ரூபாய் எடுத்து கொண்டு 36 ஆயிரம் ரூபாயை பூங்கொடி கொடுத்ததாக கூறப்படுகிறது. கடந்த 4 மாதங்களாக குடும்ப கஷ்டம் காரணமாக சர்மிளா வட்டி கொடுக்காமல் இருந்துள்ளார். தற்போது வட்டியும், அசலும் சேர்த்து 1 லட்ச ரூபாய் தர வேண்டும் என பூங்கொடி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சர்மிளா கோத்தகிரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பூங்கொடியை கைது செய்தனர்.

Categories

Tech |