மகளின் விவாகரத்து செய்தியை கேட்டு நடிகர் ரஜினிகாந்த் மிகவும் மனமுடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2004ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். நடிகர் தனுஷின் காதல் கொண்டேன் படத்தை பார்த்து அவரின் நடிப்பால் கவரப்பட்டு ஐஸ்வர்யா தனுஷிடம் காதலில் விழுந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக ரஜினியின் சம்மதம் இல்லாமலேயே பிரஸ்மீட் ஒன்றில் அறிவித்திருந்தார் தனுஷ். இது ரஜினியின் குடும்பத்தினரை அதிர்ச்சி அடையச் செய்தது. இருப்பினும் ரஜினி தனது மகளின் ஆசைக்காக இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார். தற்போது இவர்களுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆன நிலையில் யாத்ரா மற்றும் லிங்கா என்று 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிய போவதாக நேற்று முன்தினம் சமூக ஊடகங்களில் அறிவித்தனர்.
இதைக்கேட்டு மொத்த திரையுலகமும் அதிர்ச்சிக்குள்ளானது. நடிகர் தனுஷ் சில நடிகைகளுடன் நெருக்கமான உறவில் இருப்பதால் இவர்கள் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினைகள் எழுந்துள்ளன. இதனை தொடர்ந்து இருவரும் விவாகரத்து செய்து கொள்ளலாம் என்ற முடிவிற்கு வந்துள்ளனர். ஆரம்பம் முதலே ரஜினிகாந்த் இருவரிடமும் சமரசமாக பேசியுள்ளார். ஆனால் தனுஷ் தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் விவாகரத்து செய்ய முடிவெடுத்தனர். தற்போது மகளின் விவாகரத்து முடிவை கேட்டு ரஜினி மனமுடைந்து அழுததாக அவரது நட்பு வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் அவருக்கு சொந்தமான ஒரு பண்ணை வீட்டில் தனிமையாக தன்னுடைய பொழுதுகளை கழித்து வருவதாகவும் மிகவும் மனமுடைந்து காணப்படுவதாகவும் ரஜினி தரப்பு கூறுகிறது.