Categories
மாநில செய்திகள்

மகளிருக்கு ரூபாய் 1000…. நகராட்சி பேரூராட்சிகளிலும் 100 நாள் வேலை….. விரைவில் அசத்தலான திட்டங்கள் அமல்….!!!!

திமுக ஆட்சியின் ஓராண்டு நிறைவடைந்ததை தொடர்ந்து அதற்கான சாதனை விளக்க கூட்டம் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தேனி அல்லிநகரம் அருகே மாவட்ட பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் . அப்போது பேசிய அவர் இன்னும் ஓராண்டில் மத்திய ஆட்சி மாற்றம் வந்தபின் நகராட்சி பேரூராட்சிகளில் 100 நாள் வேலை திட்டம் கொண்டு வரப்படும். கூட்டுறவுத் துறை, நெடுஞ்சாலைத் துறைகளிலும் 5000 பணியிடங்கள், ஆறு மாதங்களில் எவ்வித இடையூறும் இன்றி தகுதியானவர்களை கொண்டு நிரப்பப்படும்.

சத்துணவு பணியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும். அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்க முதல்வர் முக ஸ்டாலின் முயற்சி மேற்கொண்டு வருகிறார். தேர்தல் வாக்குறுதியான பெண்களுக்கு மாதம் 1000, நிதி உரிமை தொகை வழங்கப்படும்.  கட்டாயம் நிதி உதவி தொகை கிடைக்கும். அதிமுக தலைமை இல்லாத கட்சி, அந்த கட்சி இனி காணாமல் போய்விடும். அடுத்த 20 ஆண்டுகளுக்கு திமுக தான் ஆட்சி அமைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |