Categories
மாநில செய்திகள்

மகளிருக்கு ரூ.1000, சம்பளம் உயர்வு குறித்து இன்று அறிவிப்பா?…. முதல்வர் ஸ்டாலின்….!!!!!

தி.மு.க தலைவரும் மாநில முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கடந்த 2021 ஆம் வருடம் மே 7ஆம் தேதி பதவியேற்றது. அந்த வகையில் திமுக அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவுற்று இன்று 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனை முன்னிட்டு முதலைமச்சர் ஸ்டாலின் இன்றைய தினம் கோபாலபுரத்திலுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இல்லத்திற்குச் சென்று கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதன்பின் தன்னுடைய தாயார் தயாளு அம்மாளிடம் ஆசிபெற்றார். அப்போது முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் இருந்தார். இவ்வாறு திமுக ஆட்சி ஓராண்டு நிறைவடைந்த சூழ்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் பல்வேறு முக்கியமான அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிலும் குறிப்பாக தமிழக அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு, இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூபாய் 1,000, ஏழை-எளிய மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி, பெட்ரோல், டீசல் விலை ரூ.2 வரை குறைப்பு உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |