Categories
மாநில செய்திகள்

மகளிருக்கு ரூ1,000 எப்போது?…. திட்டக்குழு கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது..!!

திட்டக்குழு கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை எழிலகத்தில் அமைந்திருக்கக் கூடிய திட்ட குழு அலுவலகத்தில் முதலமைச்சர் தலைமையில் இருக்க கூடிய மாநில திட்ட குழுவின் 3ஆவது ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த குழுவின் துணைத் தலைவராக பேராசிரியர் ஜெயரஞ்சன் இருக்கிறார்.. மேலும் முழு நேர, பகுதி நேர உறுப்பினர்கள் பலரும் உள்ளனர். இந்த கூட்டத்தில் தமிழக மேம்பாட்டுக்கான புதிய இலக்கு நிர்ணயிப்பது, கண்காணிப்பது, மதிப்பீடு மற்றும் கொள்கைக்கான ஆலோசனை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது..

இந்த திட்ட குழு அறிக்கை அடிப்படையில் தான் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள், குறிப்பாக பெண் கல்வி ஆயிரம் ரூபாய் உயர்வு, உயர்கல்வி உதவி தொகை திட்டம் எல்லாம் பிளானிங் கமிஷன் ரெகமெண்டேஷன் அடிப்படையில் தான் செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் காலை உணவு திட்டமும் இந்த மாநில திட்டக்குழு பரிந்துரை அடிப்படையில் தான் செய்துள்ளார்கள்.

இந்த கூட்டத்தில் பொருளாதார ஜெயரஞ்சன், திட்டம் வளர்ச்சித்துறை சிறப்பு செயலாளர் விக்ரம் கபூர் ஐஏஎஸ், முழுநேர பேராசிரியர் ராம சீனிவாசன், உறுப்பினர் செயலர் ராஜசேகர், சுல்தான் இஸ்மாயில் ஆகியோர் இதில் பங்கேற்று உள்ளனர். தீனபந்து (முன்னாள் ஐஏஎஸ்), டி.ஆர் பி ராஜா எம்எல்ஏ, சித்த மருத்துவர் சிவராமன் இது போன்ற பல தரப்பினரும் இதில் உள்ளனர்.. இவர்கள் முக்கியமான தரவுகளை வைத்துள்ளார்கள்..

பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மக்களுக்கு என்ன மாதிரியான திட்டங்களை செயல்படுத்தலாம் என்பன போன்ற திட்டங்கள், குறிப்பாக மகளிருக்கு ஆயிரம் ரூபாய் திட்டம் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது. எப்போது அறிவிக்கப்படலாம் என்ற அறிவிப்பை, எவ்வளவு பயனாளிகளை இதில் தேர்ந்தெடுப்பது போன்ற பல்வேறு விஷயங்கள் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

Categories

Tech |