Categories
மாநில செய்திகள்

மகளிர் கல்லூரி…. கொங்கு வேளாளர் நிர்வாகிகள் முதல்வருக்கு நன்றி….!!!!

திருப்பூர் மாவட்டத்தில் அங்கேரிபாளையம் சாலையில் கொங்கு வேளாளர் அறக்கட்டளை சார்பில் கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 30 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த பள்ளியில்  4000 ஏழை மாணவ மாணவிகள் மிக குறைந்த கட்டணத்தில் படித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களில் மேற்படிப்பிற்காக அவினாசி – வஞ்சிபாளையம்  நெடுஞ்சாலையில் கொங்கு வேளாளர் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தில்  மகளிர் கல்லூரி தொடங்குவதற்கு நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதனையடுத்து இந்த கல்லூரியை கட்டுவதற்காக விவசாய நிலத்தை தர கோரிக்கை விடுத்து நான்கு ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.  இதுகுறித்து முதல்வர் ஸ்டாலினிடம்  கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் பிறகு முதல்வர் ஸ்டாலின் ஒரே வாரத்தில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு செய்தார். இதற்கு கொங்கு வேளாளர் அறக்கட்டளை தலைவர் பெஸ்ட் ராமசாமி மற்றும் நிர்வாகிகள், எம்.பி. சுப்பராயன் ஆகியோர்கள் தலைமைச் செயலக முதல்வரை நேரில் சென்று சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

Categories

Tech |