Categories
மாநில செய்திகள்

மகளிர் சுய உதவிக் குழுவினரே உஷார்…. கூட்டுறவு வங்கி மேலாளர் செய்த மோசடி… அதிர்ச்சி சம்பவம்….!!!!!!

மகளிர் சுய உதவிக்குழு பெண்களின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு அதை வைத்து பணம்  திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்ற மத்திய கூட்டுறவு வங்கியின் குடியாத்தம் கிளையில் கடந்த 2018 மற்றும் 2019 ம்  வருடங்களில் மேலாளராக பணியாற்றிய வருபவர் உமா மகேஸ்வரி(38). இவர் தனது பணி காலத்தில் குடியாத்தம் நகரை  சுற்றியிருக்கும் கிராமத்தை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுக்களுடன் கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து சுமார் ரூ. 97 லட்சத்து 37 ஆயிரம் மோசடி செய்து இருக்கின்றார். இதுதொடர்பாக கூட்டுறவு துணை பதிவாளர் அருட்பெருஞ்ஜோதி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து வேலூர் மாவட்ட வணிக புலனாய்வுப் பிரிவு போலீஸார் தீவிர விசாரணை செய்தனர்.

அந்த விசாரணையில் போலி ஆவணம் மூலமாக உமாமகேஸ்வரி மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட உமாமகேஸ்வரி தற்போது வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் மகளிர் சுய உதவிக்குழு பெண்களின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு  அதனை வைத்து சுமார் ஒரு கோடி ரூபாய் வரை திருடப்பட்ட சம்பவம் வேலூர் மாவட்ட பெண்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. அது மட்டுமல்லாமல் போலி கடன் விவகாரத்தில் மேலும் பல அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Categories

Tech |