தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக்குழு தேசிய மற்றும் தனியார் வங்கிகளில் பெற்ற கடன் தொகையை தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். அதிமுக அரசு கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்தது போதுமானதாக இல்லை என்று குறிப்பிட்டார். மகளிர் சுய உதவி குழு சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.