கும்பகோணத்தில் ,100% வாக்கை பதிவு செய்ய வலியுறுத்தும் வகையில் பெண்களுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது .
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் ,உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 100% வாக்கை பதிவு செய்ய பெண்களுக்கான மாரத்தான் போட்டி நடந்தது. இதற்கு கும்பகோணம் நகராட்சி ஆணையராக லட்சுமி தலைமை தாங்கி நடத்தினார். மகளிர் காவலர் சப்-இன்ஸ்பெக்டராக சுபாஷினி கொடி அசைத்து போட்டியை தொடங்கினார். இந்த போட்டியானது கும்பகோணம் மகாமக குளத்தில் தொடங்கி இதயா மகளிர் கல்லூரியில் முடிந்தது.
ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கான போட்டியில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். இப்போட்டியில் முதலிடத்தில் சென்னை எத்திராஜ் கல்லூரி மாணவி மித்ரா, மயிலாடுதுறையை சேர்ந்த கீதாஞ்சலி 2 வது , சீதாயம்பாள் 3 வது இடத்தை பெற்றனர். முதல் பரிசு ரூபாய் 10 ஆயிரம், 2-வது பரிசு ரூ 5000 , 3-வது பரிசு 3000 வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.