அமெரிக்காவில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்காக நடத்தப்படும் ஹால் ஆஃப் பேஃம் உயரிய விருதுக்காக மிட்செல்ஒபாமா உட்பட பல பெண்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
உலக மகளிர் தினமானது அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது .அந்த வகையில் அமெரிக்காவில் ஆண்டுதோறும் மகளிர் தினத்தன்று பெண்களுக்காக நடத்தப்படும் உயரிய விருதான ஹால் ஆஃப் பேஃம் 2021ம் ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த விருதிற்கு முன்னாள் முதல் பெண்மணியான மிட்செல்ஒபாமா மற்றும் கால்பந்தாட்டத்தில் புகழ்பெற்ற மியா ஹாம் உள்ளிட்ட 9 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வரிசையில் முன்னாள் பெப்சிகோ தலைமை நிர்வாகியான இந்திரா நூயி மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரியான ஜெனரல் ரெபேக்கா ஹால்ஸ்டெட் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. ஆண்டுதோறும் செனெகா நீர்வீழ்ச்சி இடத்தில் , இந்த விருது நிகழ்ச்சியானது நடைபெறும். ஏனெனில் ,அந்த இடத்தில்தான் அமெரிக்க வரலாற்றிலேயே முதன் முறையாக மகளிர் உரிமை மாநாடு நிகழ்ச்சி நடந்துள்ளது. கொரோன நோய்த்தொற்று காரணமாக , விருது நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யவில்லை. இதனால் இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு இணையதளத்தின் வழியாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதாக தகவல் தெரிகிறது.