Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மகளிர் தினத்தை முன்னிட்டு…. மருத்துவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்…. வன்கொடுமைக்கு கண்டனம்….

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்க பெண்கள் பிரிவு சார்பில் பெண்கள் வன்கொடுமைகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுள்ளது.

மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டப்படுவது வழக்கம். அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்க பெண்கள் பிரிவு சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை கண்டித்து இந்த ஊர்வலம் நடந்தது.

மேலும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் தொடங்கிய இந்த ஊர்வலம் மோகனூர் சாலை, திருச்சி சாலை வழியாக சென்று மீண்டும் மருத்துவமனை வளாகத்தில் வந்தடைந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பெண் மருத்துவர்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் கவிதா சரவணகுமார், மல்லிகா குழந்தைவேல், நாமக்கல் மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனைதொடர்ந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், செவிலியர் பயிற்சி கல்லூரி மாணவிகள் பலரும் பங்கேற்றுள்ளனர்.

Categories

Tech |