Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மகளை திருமணம் செய்த இளம்பெண்…. தந்தையின் பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை…!!

மகளை திருமணம் செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தந்தை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூரில் கூலி தொழிலாளி ஒருவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனக்கு ஒரு மகனும், 2 மகள்களும் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் 9-ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். வருகிற செப்டம்பர் மாதம் 8-ஆம் தேதி எனது மகளுக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில், கடந்த 18-ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற எனது மகள் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். பின்னர் பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எனது மகள் இருப்பதாக தகவல் கிடைத்ததால் அங்கு சென்று பார்த்தோம். அப்போது எனது வீட்டிற்கு அருகே குடியிருக்கும் 25 வயதுடைய பெண் ஆசை வார்த்தைகள் கூறி எனது மகளை அழைத்து சென்று திருமணம் செய்தது தெரியவந்தது. எங்களுடன் வீட்டிற்கு வருவதற்கு மகள் மறுத்துவிட்டார். எனது மகளை திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு போதை பழக்கம் இருக்கிறது.

அவர் ஆசை வார்த்தைகள் கூறி கஞ்சா போதை ஊசி பழக்கத்திற்கு எனது மகளை அடிமைப்படுத்தியுள்ளார். மேலும் அந்த இளம்பெண் பல பெண்களையும் ஏமாற்றி சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்தியுள்ளார். சில பெண்களிடம் இருந்து கருமுட்டை எடுத்து விற்பனை செய்வதாகவும் தகவல் வெளியானது. எனவே விசாரணை நடத்தி எனது மகளை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |