Categories
தேசிய செய்திகள்

மகளிர் வசம் மார்ச் 8ம் தேதி சமூகவலைத்தளக் கணக்குகளை வழங்க தயார் – பிரதமர் மோடி!

மகளிர் வசம் மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தன்று சமூகவலைத்தளக் கணக்குகளை வழங்க தயார் என பிரதமர் மோடி கூறியுள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை தனது சமூக ஊடக கணக்குகளான பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்றவற்றை கைவிடுவது குறித்து யோசித்து வருவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “இந்த ஞாயிற்றுக்கிழமை, பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடக கணக்குகளை கைவிடுவது குறித்து யோசித்து வருகிறேன் என குறிப்பிட்டிருந்தார்.

டிவிட்டரில் அவருக்கு 5.33 கோடி பாலோயர்கள் உள்ள நிலையில் , எதற்காக திடீரென தான் சமூக வலைதளத்தில் விலக நினைப்பதாக பதிவிட்டார் என்று நெட்டிசன்கள் குழம்பினர். இதனிடையே நோ சார், நரேந்திர மோடி, மோடிஜி, சோஷியல் மீடியா, நோ மோடி நோ ட்விட்டர் ஆகிய ஹாஷ்டாக்குகளின் கீழ் ஏராளமானோர் சமூக வலைத்தளங்களில் இருந்து விலக வேண்டாம் எனக் கோரி பதிவிட்டனர்.

இந்நிலையில் ஞாயிறன்று சமூக வலைத்தளங்களில் இருந்து விலக முடிவு செய்தது விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தன்று எனது சமூக வலைத்தளங்களை பெண்கள் நிர்வகிக்கலாம். தனது வாழ்க்கையாலும், பணிகளாலும் முன்மாதிரியாக திகழும் மகளிர் வசம் மார்ச் 8ம் தேதி சமூகவலைத்தளக் கணக்குகளை வழங்க தயார்.

தங்களுக்கு ஊக்கமளித்த பெண் என்ற தலைப்பில் கருத்துக்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுங்கள். சாதனை பெண்கள் குறித்த வீடியோ பதிவுகளையும் கட்டுரைகளையும் #sheinspiresUS என்ற ஹாஷ்டாக்கில் பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் பெண்கள் பிரதமர் மோடியின் சமூக வலைதள கணக்கை ஒரு நாள் முழுவதும் நிர்வகிக்க வாய்ப்பு வழங்கப்படும். சாதனை பெண்களின் வாழ்க்கையும் பணியும் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |