டோக்கியோவில் நடைபெற்றுவரும் ஒரு போட்டியில் மகளிர் பிரிவு ஹாக்கி அணி அயர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. ஒலிம்பிக்கில் ஹாக்கி மகளிர் பிரிவில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தி உள்ளது. முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த இந்திய அணிக்கு வாழ்வா சாவா என்ற போராட்டமாக அமைந்தது. ஆட்டம் முடிய மூன்று நிமிடங்கள் இருக்கும் நேரத்தில் இந்திய அணியின் நவ்நீட் கவூர் கோல் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். நாளை காலை 8 45 மணிக்கு தென் ஆப்பிரிக்காவை இறுதியில் லீக் ஆட்டத்தில் இந்தியா எதிர்கொள்கிறது.
Categories