Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மகளுக்கு சூடு வைத்த தந்தை…. கள்ளக்காதலால் நடந்த விபரீதம்…. போலீஸ் நடவடிக்கை…!!

மகளுக்கு சூடு வைத்த ஆட்டோ ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள காஜாபேட்டை பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான கிருஷ்ணகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனகவள்ளி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு நான்காம் வகுப்பு படிக்கும் வர்ஷினி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகுமாருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் திலகவதி என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இதனை கனகவள்ளி கண்டித்துள்ளார். இந்நிலையில் குடிபோதையில் வீட்டிற்கு சென்ற கிருஷ்ணகுமார் தனது மகளிடம் திலகவதியையும் நம் வீட்டில் சேர்த்து கொள்வோம்.

அதற்கு உன் தாயிடம் பேசி சம்மதம் வாங்கு என கூறியுள்ளார். அதற்கு சிறுமி மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த கிருஷ்ணகுமார் கத்தியை பழுக்க காய்ச்சி தனது மகளுக்கு சூடு வைத்துள்ளார். இதனால் காயமடைந்த வர்ஷினி தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கனகவள்ளி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கிருஷ்ணகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |