நடிகை ஸ்ரீப்ரியாவின் மகள் சினேகாவுக்கு லண்டனில் திருமணம் நடைபெறவுள்ளது.
தயாரிப்பாளர் ராஜ்குமார் சேதுபதி மற்றும் நடிகை ஸ்ரீப்ரியா தம்பதியினரின் மகள் சினேகா சேதுபதி. சினேகாவுக்கு வரும் பிப்ரவரி மாதம் ஆறாம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. ராஜேஷ் சர்மா-சாதனா தம்பதியரின் மகனை சினேகா திருமணம் செய்துகொள்ளப் போகிறார். கொரோனாவின் தாக்கத்தாலும் விசாவுக்கு ஏதுவாகவும் திருமணம் லண்டனில் நடைபெற்று பதிவு செய்யப்படும் என்று கூறியுள்ளனர். மேலும் ஏப்ரல் 4,5,6 ஆகிய தேதிகளில் சென்னையில் திருமண விழா நடைபெற இருக்கிறது.
அன்மோல் ஷர்மா-சினேகா இந்த மணமக்களுக்கு அனைவரின் ஆசிகளும் கிடைக்க வேண்டும் என பெற்றோர் விரும்புகின்றனர். இதனால் அனைத்து உற்றார் உறவினர்களுக்கும் திருமண அழைப்பிதழ் அனுப்பப்படும் என்று கூறியுள்ளனர். சினேகா லண்டனில் உள்ள வாரிக் கல்லூரியில் சட்டப் படிப்பை படித்தார். மேலும் லண்டனிலேயே முதுகலை சட்டப் படிப்பையும் முடித்தார். அன்மோல் சர்மா இரட்டை எம்பிஏ படிப்பை லண்டனில் முடித்தார். தற்போது அவர் லண்டனில் உள்ள பாங்க் ஆஃப் இங்கிலாந்தில் பணியாற்றுகிறார். அன்மோல் ஷர்மாவின் குடும்பத்தார் கடந்த 25 வருடங்களாக இங்கிலாந்தில் தொழில் செய்து வருகின்றனர் குறிப்பிடத்தக்கது .