விமானநிலையத்தில் பயணி ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மதுரை அண்ணா நகரை அடுத்த தாசில்தார் நகரில் வசித்து வருபவர் குமரேச பாண்டியன்(72). இவர் தன் மகளுடன் மும்பை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தார். இதையடுத்து விமான நிலையத்தில் காத்திருப்போர் அறையிலிருந்தபோது அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது.
இதனால் அவருக்கு விமான நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு பின் ஆம்புலன்ஸ் வாயிலாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குமரேச பாண்டியன் பரிதாபமாக உயிரிழந்தார். இவ்வாறு மும்பை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த பயணி மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.