குஷ்பு தனது மகளுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது .
தமிழ் திரையுலகில் நடிகை குஷ்பூ சின்னத்தம்பி படத்தில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இவர் கமல், ரஜினி, சத்யராஜ் பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து படங்களில் நடித்து வந்தார். இவர் படங்களில் மட்டுமல்லாது தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
My Bommai Kutti.. you need nothing more when you have them around you.. ❤️❤️❤️❤️ pic.twitter.com/1HCo8AjJDF
— KhushbuSundar (@khushsundar) April 22, 2021
மேலும் இயக்குனர் சுந்தர்.சி யை நடிகை குஷ்பூ காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர் . இந்நிலையில் நடிகை குஷ்பூ துளிகூட மேக்கப் இல்லாமல் தனது மகளுடன் இணைந்து எடுத்த செல்பி புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.