வேன் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள போலநாயக்கன் பாளையம் பகுதியில் வேன் டிரைவரான பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்னக்கொடி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பழனிசாமிக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் அன்னக்கொடி தனது 2 மகள்களுடன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பழனிச்சாமி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பழனிசாமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.