குடும்ப பிரச்சனையில் தாய் மகளுடன் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அண்டுகோடு ஈந்திகாலை பகுதியில் கிஷோர்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகி(38) என்ற மனைவி இருந்துள்ளார் இந்த தம்பதியினருக்கு சாய் கிருஷ்ணா(10) என்ற மகள் உள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தனி அறைக்கு தூங்கு சென்ற சகியும், கிருஷ்ணாவும் அலறி சத்தம் போட்டனர். அந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்த போது உடல் கருகிய நிலையில் சகி சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் தீக்காயங்களுடன் சிறுமி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சகியின் உடலை மீட்டு அரசு மருத்துவனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் குடும்ப பிரச்சினையில் சகி மகளுடன் தீக்குளித்தது தெரியவந்தது. இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.