Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மகளுடன் மாமனார் வீட்டிற்கு சென்ற நபர்….. பெண் செய்த செயல்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!

சிறுமியிடம் நகையை பறித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவிளந்தூர் ராதாநல்லூர் தெருவில் தினேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 7 வயது உடைய அபிக்ஷா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் தினேஷ்குமார் தனது மகளுடன் தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் மாமனார் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் அரசு பேருந்தில் மயிலாடுதுறைக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை சாலை பேருந்து நிறுத்தத்தில் அபிக்ஷாவை கையில் பிடித்துக் கொண்டு தினேஷ்குமார் இறங்கியுள்ளார்.

அப்போது பெண் ஒருவர் சிறுமியின் கழுத்தில்  அணிந்திருந்த 1/2 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பி ஓடினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தினேஷ்குமார் பொதுமக்களின் உதவியுடன் அந்த பெண்ணை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் மதுரை வண்டியூரில் வசிக்கும் வெங்கடேசன் மனைவி மஞ்சுளா(45) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் மஞ்சுளாவை கைது செய்து, அவரிடமிருந்து தங்க சங்கிலியை மீட்டனர்.

Categories

Tech |