காரைக்காலில் தனது மகளை விட நன்றாக படிக்கும் மாணவனை குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து பெண் ஒருவர் கொல்ல முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் நேரு நகரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் இரண்டாவது மகன் பால மணிகண்டன் அங்குள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.சம்பவத்தன்று ஆண்டுவிழா ஒத்திகையில் ஈடுபட்டு விட்டு வீடு திரும்பிய சிறுவனுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன் பிறகு என்ன நடந்தது என்று விசாரித்த போது பள்ளியின் காவலாளி குளிர்பானம் கொடுத்ததாக சிறுவன் கூறிய நிலையில் பெற்றோர் பள்ளிக்குச் சென்று விசாரித்தனர்.அப்போது அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை சோதனை செய்ததில் மாணவருடன் படிக்கும் சக மாணவியின் பெற்றோர் குளிர்பானம் தருவது பதிவாகி இருந்தது. தன் மகளை விட படிப்பில் பால மணிகண்டன் சிறந்தவராக இருந்ததால் பொறாமையில் சகாயராணி விக்டோரியா என்ற பெண் மாணவனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய முயற்சி செய்து உள்ளார். தற்போது மாணவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அந்த பெண்ணின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.