ராஜஸ்தானில் மகளை ஆசிரியர் அடித்ததால் ஆத்திரம் அடைந்த ராணுவ வீரர் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில் மகளை ஆசிரியர் அடித்ததால் ஆத்திரம் அடைந்த ராணுவ வீரர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த போது திடீரென அவருடைய துப்பாக்கியை எடுத்து தலைமை ஆசிரியரை நோக்கி சுட்டார். இதனை தடுக்க முயன்ற இராணுவ வீரரின் மனைவி மீது குண்டு பாய்ந்தது. இதனால் அவர் காயமடைந்தார். நல்லவேளையாக தலைமை ஆசிரியருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. பரத்பூா் மாவட்டம் கந்த்வாடா கிராமத்தைச் சோ்ந்த ராணுவ வீரா் பப்பு குா்ஜாா். இவர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
அப்போது கடந்த திங்கட்கிழமை அன்று பப்புவின் மகள் வீட்டுப்பாடம் எழுதாமல் பள்ளிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆசிரியர் அவரை அடித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரிப்பதற்காக அந்த பள்ளிக்கு பப்பு சென்றுள்ளார். இதுகுறித்து ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் ஊழியர்களிடம் விசாரணை பப்பு செய்து கொண்டிருந்தார். அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த ராணுவ வீரர் பப்பு தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தலைமை ஆசிரியரை நோக்கி சுட்டுள்ளார். இதனை தடுக்க முயன்ற ராணுவ வீரனின் மனைவி மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இந்த சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.