Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

மகளை அடித்த கணவன்…. நியாயம் கேட்ட தாய், தந்தை…. கத்தியால் குத்திய மருமகன் ..!!

குடும்ப தகராறில் ஆத்திரம் கொண்டு மாமனார், மாமியாரையும் கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடிய மருமகனை காவல்துறை வலைவீசி தேடி வருகின்றார்கள்.

புதுசேரின்  வில்லியனுர் மாவட்டத்தில்  உள்ள நெட்டப்பாக்கம் கரியமாணிக்கம் கோழிப்பண்ணை தெருவில் வசித்து வருபவர் ராஜராஜன். 40 வயதுடைய   இவரின் மனைவி ஹேமாக்கு  26 வயது. ராஜராஜன்க்கும், ஹேமாக்கும்  இடையில் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது. மேலும்  ஹேமாவை கடந்த சில நாட்களுக்கு முன் , ராஜராஜன் அடித்திருக்கிறார் . இதை அறிந்த ஹேமாவின் பெற்றோர், மகளின் வீட்டுக்கு சென்று மருமகனிடம் நியாம் கேட்டு உள்ளார் .

அதில் கோவம் அடைந்து ராஜராஜன் கத்தியால் தாக்கியுள்ளார். அதில் மாமியார் செல்விக்கு  கையிலும், மாமனார் பெருமாளின் தலையிலும் காயம் ஏற்பட்டு  உள்ளது. உடனே  அவர்களை  தனியார் மருத்துவமனைக்கு  அழைத்து சென்று  சிகிச்சை கொடுக்கப்பட்டு  வருகிறன்து. நெட்டப்பாக்கம் காவல்துறை,  இச் சம்பவம் குறித்து புகாரின்  அடிப்படையில் வழக்குப்பதிந்து  தப்பித்து ஓடிய ராஜராஜனை வலைவீசி தேடி வருகின்றார்கள்.

Categories

Tech |