Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மகளை அழைக்க சென்ற தந்தை…. கோர விபத்தில் பலியான சோகம்…. நாகையில் பரபரப்பு…!!

ஸ்கூட்டர் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பழகடை உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பொரவாச்சேரி சிவசக்தி நகரில் கார்த்திக்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பழைய பேருந்து நிலையத்தில் பழக்கடை நடத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் கார்த்திக் பள்ளியில் படிக்கும் தனது மகளை அழைத்து செல்வதற்காக ஸ்கூட்டரில் நாகை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் நாகை வ.உ.சி வது தெரு அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக சென்ற அரசு பேருந்து ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்திக்கின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |