Categories
தேசிய செய்திகள்

மகளை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன்…. நீதிமன்றத்தில் வைத்தே சுட்டுக்கொன்ற தந்தை…. பரபரப்பு சம்பவம்….!!!!

பீகார் மாநிலம் முசாபர்பூரில் வசித்து வருபவர் தில்ஷாத் ஹுசைன். இவர் அந்த பகுதியில் ஒரு சைக்கிள் கடை வைத்து நடத்தி வந்தார். இவர் வீட்டு அருகே உள்ளவர் பகவத் நிஷாத். கடந்த 2020-ஆம் ஆண்டு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தில்ஷாத்தின் மகளை பகவத் நிஷாத் கடத்தி சென்றிருக்கிறார். இதைடுத்து 2021-மார்ச் மாதம் ஹைதராபாத்தில் தில்ஷாதத்தை காவல்துறையினர் கைது செய்து சிறுமியை மீட்டனர். பின்னர் சிறுமி அளித்த பாலியல் பலாத்கார புகாரின் அடிப்படையில் தில்ஷாத் மீது போக்சோ உட்பட ஐபிசி பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து வழக்கறிஞர் அழைத்ததால், கோரக்பூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு தில்ஷாத் வந்துள்ளார். அப்போது அவர் வழக்கறிஞரை சந்திப்பதற்காக காத்துக்கொண்டு இருந்திருக்கிறார். அப்போது திடீரென அங்கு வந்த பகவத் நிஷாத் தான் வைத்திருந்த துப்பாக்கியால் தில்ஷாத்தின் தலையில் சுட்டார். இதனால் சம்பவ இடத்திலேயே தில்ஷாத் உயிரிழந்தார். அதன் பின்னர் அருகில் இருந்த காவல்துறையினர் பகவத் நிஷாத்தை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை சுட்டுக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |