திருமணத்திற்கு கட்டாயப்படுத்தியதால் மனமுடைந்த இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள டி.வி.கே.கே.நகரில் பழனிவேல் என்பவர் வசித்து வருகின்றார். இவரது மகள் பாண்டியம்மாள் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டில் திடீரென திருமண ஏற்பட்டு செய்துள்ளனர். இதனையடுத்து பாண்டியம்மாள் தனக்கு திருமணம் வேண்டாம் என்றும், நான் படிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஆனால் அவரது பெற்றோர் பாண்டியம்மாளை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். இதனால் விரக்தியடைந்த பாண்டியம்மாள் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையறிந்த போடி நகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.