தாய் கண்டித்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள போன் அல்லூர் போஸ்ட் ஆபீஸ் தெருவில் செல்ல சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சண்முகத்தாய் என்ற மனைவி உள்ளார். இவர் தென்காசியில் இருக்கும் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு பெனியாராஜ் என்ற மகள் இருந்துள்ளார். இவர் கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் படிப்பில் அதிக கவனம் செலுத்தாத தனது மகளை சண்முகத்தாய் கண்டித்துள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.