பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்துள்ள மிதிகுண்டு கிராமத்தில் கமல் என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு கயானா என்ற மகள் உள்ளது. இவர் பேளுக்குறிச்சி பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் 8ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கயானா படிக்காமல் செல்போனில் கேம்மிற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. எனவே அவரது பெற்றோர் நன்றாக படிக்கும்படி மகளை கண்டித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த மாணவி கடந்த மாதம் 15ஆம் தேதி வீட்டில் இருந்த மண்ணெண்ணையை ஊற்றி தீ தீக்குளித்துள்ளார். இதனை பார்த்து பதறிய பெற்றோர் உடனடியாக கயானாவை மீட்டு சேலம் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக சிகிச்சை பெற்றுவந்த மாணவி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த சேந்தமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.