Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மகளை கண்டித்த பெற்றோர்…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மாணவி  விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள சக்கிமங்கலம் கிராமத்தில் சக்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜிதா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சரியாக படிக்காமல் இருந்த அஜிதாவை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த அஜிதா கடந்த 14-ஆம் தேதி விஷம் குடித்து மயங்கிவிட்டார்.

இதனை அடுத்து குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |