Categories
தேனி மாவட்ட செய்திகள்

“மகளை கண்டுபிடித்து கொண்டுங்கள்”… தாய் செய்த காரியம்… ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

மகளை கண்டுபிடித்து தருமாறு தாய் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள பல்லவராயன்பட்டியில் வனஜோதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் சென்றுள்ளார். இதனையடுத்து அலுவலக வாயிலில் நின்று கொண்டு திடீரென தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்த பாதுகாப்பிற்கு நின்ற காவல்துறையினர் உடனடியாக வனஜோதியை தடுத்து நிறுத்தி அவரிடம் இருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்துள்ளனர்.

இதனைதொடர்ந்து அவரை விசாரணைக்காக தேனி அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் வனஜோதியின் மகள் துர்காதேவி கடந்த ஆகஸ்டு மாதத்தில் இருந்து காணவில்லை. இதில் பல்லவராயன்பட்டியை சேர்ந்த ஒருவருக்கு தொடர்பு உள்ளதாக வனஜோதி கோம்பை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆனால் காவல்துறையினர் உரிய எடுக்கவில்லை. எனவே எனது மகளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்காததால் விரக்தியடைந்து தீக்குளிக்க முடிவு செய்தேன் என வனஜோதி தெரிவித்துள்ளார். இதனையடுத்து கோம்பை காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு வனஜோதி அளித்த புகாரில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டு அவர்களுடன் வனஜோதியை அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |