Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மகளை தூங்க வைத்து விட்டு சென்ற தாய்…. வீட்டிற்குள் இருந்து ஓடி வந்த நபர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் பகுதியில் 6 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் சிறுமியை அவரது தாய் தூங்க வைத்துவிட்டு அருகில் இருக்கும் வீட்டிற்கு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது கதவு உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் கதவை தட்டி கூச்சலிட்டார். உடனடியாக அதே பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளியான ரஞ்சித் என்பவர் கதவை திறந்து கொண்டு வெளியே ஓடி வந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் தனது மகளிடம் என்ன நடந்தது என கேட்டார். அப்போது ரஞ்சித் தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்தது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியின் தாய் கள்ளக்குறிச்சி அனைத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்த போலீசார் ரஞ்சித்தை கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |