லாரி ஓட்டுநர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் செஞ்சி ரோடு பகுதியில் லாரி ஓட்டுநரான ஷேக் அலி(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகளை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென வீட்டின் அருகே ஷேக் அலி மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஷேக் அலி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.