இரும்பு கடையில் சாமான்களை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள ஏ.எம்.கே. நகரில் சம்சுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கீழசெருவாய் பகுதியில் பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்சுதீன் கடந்த 17-ஆம் தேதி தனது மகள் வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது கடை குடோனில் இருந்த 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பித்தளை, செம்பு உள்ளிட்ட பழைய சாமான்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சம்சுதீன் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.