வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள வாசுதேவநல்லூர் பகுதியில் கூட்டுறவு சங்க முன்னாள் செயலாளரான ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவியுடன் சென்னையில் இருக்கும் மகளை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 18 பவுன் தங்க நகைகள் மற்றும் 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணம் போன்றவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ராஜா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.