அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் கணவன் கண்முன்னே பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அருகம்பட்டி பகுதியில் கூலி தொழிலாளியான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெருமாளம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் தனது மகள் மாரியம்மாளை பார்ப்பதற்காக மொபட்டில் சென்றுள்ளனர். இவர்கள் தாடிக்கொம்பு-இடையகோட்டை சாலையில் கெண்டயகவுண்டனூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த வாகனம் மொபட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த பெருமாளம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதனையடுத்து காயமடைந்த மணிகண்டனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.