வீட்டின் கதவை உடைத்து தங்க நகையை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள ஆம்பூர் மேல பிள்ளையார் கோவில் தெருவில் செல்லப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராசம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தம்பதியினர் திண்டுக்கல்லில் இருக்கும் மகளை பார்ப்பதற்காக வீட்டில் பூட்டி விட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு செல்லப்பா அதிர்ச்சி அடைந்தார்.
அதன்பின் பீரோவில் இருந்த 13 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து செல்லப்பா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.