Categories
மாநில செய்திகள்

மகளை வீட்டில் விட்டுச் சென்ற தந்தை… 6 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை… தந்தைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!!!

கோழிக்கோடு அருகே வீட்டில் தனது சகோதரிகளுடன் இருந்த 6 வயது சிறுமியை தொழிலாளி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோழிக்கோடு மாவட்டம் பாலுச்சேரி பகுதியில் உன்னிகுளம் என்ற இடத்தில் கல்குவாரி ஒன்று இருக்கின்றது. அங்கு நேபாள நாட்டைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றார். அப்பகுதியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் அப்பகுதியில் குடிசை அமைத்து வசித்து வருகிறார்கள். இந்நிலையில் நேபாளத்தை சேர்ந்த அந்தத் தொழிலாளியின் மனைவி, அதே பகுதியில் வசித்துக் கொண்டிருக்கும் தனது உறவினரை பார்ப்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது அவர் நீண்ட நேரம் ஆகியும் வராததால் அவரைத் தேடி தொழிலாளி சென்றுள்ளார். தனது மூத்த மகள் 6 வயது சிறுமியிடம், மற்ற இரண்டு குழந்தைகளை பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு அந்த தொழிலாளி புறப்பட்டுச் சென்றார். அதன்பிறகு 6 வயது சிறுமியின் திடீரென பயங்கரமாக சத்தம் போட்டுள்ளார். அதனைக் கேட்ட அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது சிறுமியின் தலையில் காயம் ஏற்பட்டிருந்தது. சிறுமி தொடர்ந்து அழுது கொண்டே இருந்தார். அதன்பிறகு சிறுமியை மீட்டு அங்கிருந்தவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பதாக கூறினர். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், தொழிலாளியின் வீட்டிற்கு அருகே வசித்து வரும் நெல்லியம் பாளையத்தை சேர்ந்த தொழிலாளி ரிதிஷ் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் அந்த தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |