Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“மகள்களின் திருமணம்” கடன் சுமையால் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள  இரவிபுதூர்கடையில் முகமது நாசர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் முகமது நாசர் தன்னுடைய மகள்களின் திருமணத்திற்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் உரிய நேரத்தில் அவரால் அந்த கடனை திரும்ப செலுத்த முடியவில்லை.

இதனால் கடந்த சில நாட்களாக முகமது  மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில்  வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து முகமது  விஷம் குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் முகமது நாசரை மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முகமது நாசர்  பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து முகமது நாசரின் மனைவி ரூகையா பீவி திருவட்டார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |