குக் வித் கோமாளி நடுவர் செப் தாமு தனது மகள்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களும், கோமாளிகளும் இணைந்து காமெடியில் கலக்கி வருகின்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியின் நடுவர்கள் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு இருவரும் கோமாளிகளுக்கு இணையாக காமெடி செய்து அசத்தி வருகின்றனர் .
இந்த நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் அவ்வப்போது கொடுக்கும் கவுண்டர்கள் ரசிக்கும் வகையில் இருக்கும் . இந்நிலையில் செப் தாமு தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.