Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மகள்களை மாமியார் வீட்டில் விட்டு வந்த தந்தை…. தம்பதி தூக்கிட்டு தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்….!!!

கடன் தொல்லையால் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரியில் சிவகுமார்(50)- கிருஷ்ணவேணி(45) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இதில் சிவக்குமார் கிருஷ்ணகிரி சாலையில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ரியல் எஸ்டேட் தொழில் உள்பட பல்வேறு தொழில்களில் ஈடுபட்ட சிவக்குமார் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய பணத்தை திருப்பி செலுத்த இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த தம்பதியினர் விடுமுறை தினத்தில் தனது மகள்களை மாமியார் வீட்டில் விட்டு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் கடை சாவியை வாங்குவதற்காக மளிகை கடையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் சிவக்குமாரின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது தம்பதியினர் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இரண்டு பேரின் உடல்களையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரதமர் சோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் சிவக்குமார் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் கடன் தொல்லையால் தாங்கள் தற்கொலை செய்ய முடிவு எடுத்ததாக குறிப்பிட்டுள்ளனர். இதுகுறித்து வழக்கு தவிர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |